கனடாவில் வீடொன்றிலிருந்து 3 சடலங்கள் மீட்பு
கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸாருக்க கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை
மேலும் இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சடலங்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனையின் பின்னரே இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் உறுதிபடுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் அதனை தெரிவிக்க முன்வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.