300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள், ராணுவம்.., மலேசிய மன்னரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியமா?
மலேசியாவின் 17வது மன்னராக இன்று முடிசூடி இருக்கும் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் (Sultan Ibrahim ibni Sultan Iskandar) சொத்து மதிப்பு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
சொத்து மதிப்பு
மலேசிய மன்னர் குடும்பத்தின் சொத்து மதிப்பினை யாராலும் அறிய முடியாது. ஏனெனில், மலேசியாவை தவிர பிற இடங்களிலும் அவரது சொத்துக்கள் அதிகமாக உள்ளன. மலேசியா மன்னரின் சொத்து மதிப்பினை தோராயமாக 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் என ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது.
சொந்த நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் போட்டுள்ள முதலீடு மூலம் விநாடிகளில் சொத்து மதிப்பு ஏறிக் கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக, செல் சேவை நிறுவனங்களில் ஒன்றான யு மொபைலில் 24 சதவீத பங்குகளை சொல்லலாம்.
அதுமட்டுமல்லாமல், தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள முதலீடுகள் மட்டுமே 588 மில்லியன் டொலராகும். மலேசிய மன்னர் சிங்கப்பூரில் வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே 4 பில்லியன் டொலராகும். மேலும், மலேசியா சுல்தானின் பங்குச்சந்தை சார்ந்த முதலீடு மட்டுமே 1.1 பில்லியன் டொலராகும்.
இதனை தவிர ரியல் எஸ்டேட், சுரங்கத் தொழில்கள், தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் உற்பத்தி என பல்வேறு தொழில்கள் உள்ளன.
இவர்களின் சொத்துக்கு முக்கிய உதாரணமாக இவர்களது இல்லமான Istana Bukit Serene சான்றாகும். மொத்தம் 300 சொகுசு கார்கள், தனியார் ராணுவம், ஜெட் விமானங்கள் ஆகியவை உள்ளன.