4 வருடத்தில் 3000 சதவீதம் லாபம்.. அடேங்கப்பா, இதை மிஸ் பண்ணிட்டோமே..!!

பங்கு முதலீட்டாளர்கள் எப்போதும் அதிக லாபம் தரும் குறைந்த விலை பங்குகளையே அதிகம் தேடுவார்கள், அப்படி ரிஸ்க் எடுத்து அதிகம் முதலீடு செய்யும் சில பென்னி பங்குகள் (Penny Stocks) பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.

NSE ல் அதிக லாபம் தரும் பல குறைந்த விலை பங்குகளில், Comfort Intech பிரபலமான நிறுவனமாக முதலீட்டாளர்கள் மத்தியில் திகழ்கிறது. இது வர்த்தக மற்றும் விநியோக நிறுவனமாகும், இது கடந்த நான்கு வருடங்களில் 3000% க்கும் அதிகமான லாபத்தை வழங்கி Multi-bagger பங்குகளாகத் திகழ்கிறது.

ஏப்ரல் 2020 இல், Comfort Intech பங்குகள் 22 பைசா (ரூ.0.22) என்ற விலையில் இருந்தன. NSEல் தற்போது இதன் பங்கு விலை ரூ.10.06 என வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மூடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2020 இல் ரூ.5,000 மட்டுமே முதலீடு செய்திருந்தால், இன்று இந்த குறைந்த விலை பங்கிலிருந்து மட்டும் ரூ.2,50,000 லாபம் கிடைத்திருக்கும்.

அதேபோல், ரூ.10,000 மட்டுமே முதலீடு செய்திருந்தால் அது இன்று ரூ.5 லட்சமாக இருக்கும். இன்று, மார்ச் 15 நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.321 கோடி ஆகும்.

Comfort Intech நிறுவனம் 1994 இல் நிறுவப்பட்டது. இதன் முந்தைய பெயர் Comfort Finvest Limited. புதிய நிறுவன சான்றிதழை (Certificate of Incorporation) பெறும் பொருட்டு, 2000 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பெயர் Comfort Intech Limited (CIL) என்று மாற்றப்பட்டது.

இது பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் வர்த்தகம், மதுபான உற்பத்தி, வர்த்தக பொருட்கள், நிலையான சொத்துகளுக்கான நிதி மற்றும் குத்தகை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படும் ஒரு பொது நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 271% உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த மூன்று மாதங்களில் 25.12% லாபத்தையும், ஒரு மாதத்தில் 11.90% லாபத்தையும் பங்கு முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. தற்போது ரூ.10.06 என வர்த்தகமாகி வரும் இந்த பங்கின் 52 வார உச்ச விலை ரூ.12.28 ஆகும், இது 2024 பிப்ரவரி 27 அன்று பதிவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்நிறுவனம் ரூ.46.03 கோடி வருவாயை ஈட்டியுள்ளது, இது 2022 ம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 25.63% அதிகமாகும்.

இது முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது 71.82% வருவாய் அதிகரிப்பு ஆகும். மார்ச் 2023 நிலவரப்படி, நிறுவனம் ரூ.142.4 கோடி வருவாயையும், ரூ.8 கோடி லாபத்தையும் ஈட்டியுள்ளது.

பங்குதாரர்கள் கட்டமைப்பைப் பார்க்கும்போது, 57.46% பங்குகள் நிறுவனர்களிடமும் (Promoters), 42.54% பங்குகள் பொது சந்தையிலும் உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *