4 வருஷத்துல 3006% லாபம் தந்த பங்கு! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
ஏனெனில் பல்வேறு சூழல்கள் காரணமாக எப்போது வேண்டுமானாலும் எந்த நாளில் வேண்டுமானாலும் பங்குகளின் விலை ஏறலாம் அல்லது இறக்கம் காணலாம். ஆனால் நீண்ட காலமாக ஒரு பங்கினை வைத்திருப்பவர்களுக்கு அவை நிலையான வருமானத்தை தருகின்றன.
அப்படி ஒரு பங்கு குறித்து விரிவாக பார்க்க இருக்கிறோம்.கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் (Kernex Microsystems) நிறுவனம் ரயில்வேக்கான பாதுகாப்பு அமைப்புகள், மோதல் தடுப்பு சாதனங்கள் மற்றும் அவற்றுக்கான மென்பொருள் சேவைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
1999 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க தொடங்கியது. கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ரயில்வே பாதுகாப்பு வாரிய உறுப்பினர்களுக்கு ACDக்களின் முன்மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கி தந்துள்ளது.ரயில்வே உள்கட்டமைப்பு, ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மேம்படுத்த அதிக செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.
அதே போல ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது.ரூ.20.25 முதல் ரூ.629 வரை உயர்ந்த விலை: இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அள்ளி தந்துள்ளன. அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு 20.25 ரூபாய் என இருந்த பங்கின் விலை தற்போது 629 ரூபாய் என உயர்ந்துள்ளது.