குறைந்த இன்னிங்ஸில் 32 சதங்களை அடித்து கேன் வில்லியம்சன் சாதனை!
தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு விளையாடியது. மொத்தமுள்ள 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை 2 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து அணி.
இதில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் , இரண்டாவது போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்துள்ளார், கேன் வில்லியம்சன்.
டெஸ்ட் வரலாற்றில் 172 இன்னிங்ஸில் 32 சதங்களை அடித்து வில்லியம்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின்(Steve Smith) சாதனையை முறியடித்து, வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.
இதே போன்று, ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 176 இன்னிங்ஸிலும், சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)179 இன்னிங்ஸிலும், யூனிஸ் கான் (Younis Khan) 183 இன்னிங்ஸிலும் 32 சதங்களை அடித்து சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.