பாலமேடு ஜல்லிக்கட்டில் 35 பேர் படுகாயம்…!
வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 8 பேர், காவலர்கள் 3 பேர் என 35 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை 8 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில் 8 சுற்றுகளில் மொத்தமாக 714 காளைகள்அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளுக்கும் 700 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது…தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டத் தொடங்கியுள்ளன. இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டை இன்று காலை 7 மணிக்கு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். பாலமேட்டிலுள்ள பல்வேறு கோவில்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இன்று காலை 7 மணி முதல் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெற உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் 50லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் கலந்துகொள்வர். இதுவரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 3677 காளைகளும் 1412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 1,000 காளைகள், 700 வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் சார்பில் காரும், மாடு பிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல்பரிசாக காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது