3-வது ஒருநாள்: இந்திய மகளிரணிக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இந்திய மகளிரணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைக் குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபோபி லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும் (16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), கேப்டன் ஹேலி 82 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோட் கௌர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. தொடரை இழந்தபோதிலும் இந்திய அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *