“விராட் கோலிக்கு 3ம் இடம் சரியில்லை.. மாத்தி இந்த இடத்தில் விளையாட வைங்க” – ஆகாஷ் சோப்ரா பேட்டி
தற்பொழுது இந்திய மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் நீண்ட மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.
அடுத்து நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து இவர்கள் இருவரும் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க, விராட் கோலி எப்பொழுதும் போல மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்பது தெரிகிறது.
பொதுவாக விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் மதியம் ஓவர்களில் சுழற் பந்துவீச்சில் கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவர் ஆங்கர் ரோல் மட்டுமே செய்ய முடிகிறது. அவர் பெரிதாக தாக்குதல் பாணியில் விளையாட முடிவதில்லை.
இதன் காரணமாக அவர் துவக்க வீரராக வந்தால் புதிய பந்தில் பவர் பிளேவில் வெகு எளிதாக ரன்களை குவிக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் நம்புகிறார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அவர் வெற்றிகரமான துவக்க வீரராகவும் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மொத்தமாக பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது “இந்திய அணியின் டி20 துவக்க ஆட்டக்காரர் யார் என்கின்ற ரேசில் கில்லை தாண்டி ஜெய்ஸ்வால் ஓடி வெற்றி பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். கில் இந்த போட்டியில் சற்று பின் தங்கி விட்டார்.
ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு போட்டிகளிலும் ஓபன் செய்தார். மேலும் சூப்பர் ஓவரிலும் அவர் விளையாட அனுப்பப்பட்டார். இரண்டாவது போட்டியில் அவர் விளையாடிய விதத்தில், தற்போது அவர் கைவிட முடியாத வீரராக மாறிவிட்டார்.
டி20 கிரிக்கெட் பொறுத்தவரை விராட் கோலிக்கு துவக்க வீரராக வருவது மிகச் சிறந்த இடம் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணிகள் நிர்வாகம் இதைப்பற்றி சிந்திக்காத காரணத்தினால் அவர் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று உறுதி ஆகிறது.