மோடி திட்டத்தால் பலன் அடையும் 4 நிறுவனங்கள்.. முதலீடு செய்தால், லாபம் நிச்சயம்! மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசு இயற்கை எரிவாயு இறக்குமதி செலவினத்தை குறைக்கும் நோக்கில், இயற்கை எரிவாயு உடன் பயோகேஸ் கலப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போன்றது. பயோகேஸ் பயன்பாடு அதிகரிப்பு வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக அவை நல்ல பயன்பாட்டுக்கு கொண்டு வரும், கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியும் குறையும். மத்திய அரசின் அறிவிக்கையின்படி, 2025-26ம் நிதியாண்டு முதல் கம்பரஸ்டு பயோகேஸ் (CBO) கலப்பது கட்டாயமாகும். 2025-26, 2026-27, 2027-28ம் நிதியாண்டுகளில் மொத்த சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி நுகர்வில் முறையே 1 சதவீதம், 3 சதவீதம் மற்றும் 4 சதவீதம் சிபிஓ கலப்பது கட்டாயமாகும். 2028-29ம் நிதியாண்டு முதல் சிபிஓ கலப்பு 5 சதவீதமாக இருக்கும். இயற்கை எரிவாயுடன் பயோகேஸ் கலப்பு நடவடிக்கையால் சில நிறுவனங்கள் பயன் அடையும். அதில் 4 நிறுவனங்கள் குறித்து பாா்ப்போம். கெயில் இந்தியா: மத்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் இயற்கை எரிவாயு பரிமாற்றம் உள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.5,301 கோடி ஈட்டியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.1,412 கோடி மற்றும் ரூ.2,405 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் மூலதன செலவினங்களில் ரூ.30,000 கோடி முதலீடு செய்ய இலக்க நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 1ம் தேதியன்று இப்பங்கு புதிய 52 வார உச்சத்தை (ரூ.169.35) எட்டியது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தில் முடிவில் இப்பங்கின் விலை ரூ.162.40ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.06 லட்சம் கோடியாக உள்ளது. அதானி டோட்டல் கேஸ்: அதானி மற்றும் டோட்டல் எனர்ஜிஸ் எஸ்இ ஆகிய நிறுவனங்களின் கூட்டு வர்த்தக நிறுவனமான இந்நிறுவனம் எரிவாயு சப்ளை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சிபிஜி மற்றும் இவி சார்ஜிங் உள்ளிட்ட தனது கிளீன் எரிபொருள் உள்கட்டமைப்பை விரிவுப்படுத்தும் நோக்கில், அடுத்த 8-10 ஆண்டுகளில் ரூ.18,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.