அதிகம் ஊதியம் கிடைக்கும் 4 பணிகள்… எவை என்று தெரியுமா?
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஐடி நிபுணர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் இன்ஜினியரிங் மாணவர்கள் மத்தியில் கணினி அறிவியல் மிகவும் பிடித்தமான பாடமாக மாறியுள்ளது.
கணினி அறிவியலுக்கு பிறகு அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இயந்திர வழி கற்றல் : ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இந்த துறையில் நுபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. சராசரிய ஒரு இயந்திர வழி கற்றல் பொறியாளரின் ஊதியம் ரூ.11 லட்சமாக உள்ளது.
டேட்டா சயின்டிஸ்ட் : டேட்டா சயின்டிஸ்ட் என்பவர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான தரவுகளை புரிந்துக்கொள்ளும் தன்மை கொண்டிருக்க வேண்டும். அதிக ஊதியம் வழங்கப்படும் பணிகளில் இதுவும் ஒன்று. இந்த துறையில் பணிபுரிபவர்கள் குறைந்த காலத்தில் அதிக ஊதியம் பெறலாம்.
இணைய பாதுகாப்பு பொறியாளர் : சைபர் ஹேக் அதிகரித்துள்ள சூழலில் இணைய பாதுகாப்பு பொறியாளரின் தேவையும் அதிகரித்துள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு இணைய பாதுகாப்பு பொறியாளர் தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த பணிக்கு அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது. தரவுகளின் படி இணைய பாதுகாப்பு பொறியாளார் பணிக்கு ஆரம்பத்திலே ரூ.8,00,000 முதல் 10,00,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் :தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக வேண்டுமென்றால் பி.டெக் கம்பியூட்டர் சயின்ஸ் முடித்திருக்க வேண்டும். இவர்களின் பிரதான வேலை தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து எப்படி வருமானம் ஈட்டுவது என்று ஆலோசனை வழங்குவது தான். இந்த பணிக்கு லட்ச கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. தோராயமாக ஒரு தகவல் தொழில்நுட்ப ஆலோசகருக்கு ஆண்டுக்கு ரூ.10,00,000-க்கும் மேல் ஊதியம் வழங்கப்படுகிறது.