டார்க் எடிஷனில் பிரபல 4 கார்கள்… என்னென்ன மாடல்கள் தெரியுமா..?

இந்தியாவை சேர்ந்த பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸான், நெக்ஸான் ஈவி (Nexon.ev), ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி-க்களின் டார்க் எடிஷன் வேரியன்ட்ஸ்களை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் டார்க் எடிஷன்களில் பலவிதமான காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த புதிய டார்க் எடிஷன் SUV-களுக்கான புக்கிங்ஸ் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வாங்க ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைனில் அல்லது அவர்களின் அருகிலுள்ள டீலர்ஷிப்பை பார்வையிடுவதன் மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம்.

நெக்ஸான் டார்க் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.45 லட்சத்திலும், நெக்ஸான் ஈவி டார்க் எடிஷன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.49 லட்சத்திலும், ஹாரியர் டார்க் எடிஷன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.99 லட்சத்திலும், சஃபாரி டார்க் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.69 லட்சத்திலும் தொடங்குகிறது. இவற்றின் வேரியன்ட் விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நெக்ஸான், நெக்ஸான்.ev, ஹாரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன்கள் முழுவதும் டார்க் பேட்ஜ்களுடன் பிரத்தியேகமான ஃபுல் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேடை பெறுகின்றன. இந்த SUV-க்கள் கருப்பு நிறத்தில் இருக்கும் ஃப்ரன்ட் கிரில், ரூஃப் ரெயில்ஸ் , ORVM-க்கள் மற்றும் அலாய் வீல்ஸ்களையும் கொண்டுள்ளது.

குறிப்பாக நெக்ஸான் மற்றும் நெக்ஸான் ஈவி கார்களின் இன்டீரியர் பிளாக் தீம் கொண்டிருக்கிறது. பிளாக் கலர் லெதரெட் சீட்ஸ்கள் ஹெட்ரெஸ்ட்களில் ‘டார்க்’ என்ற எழுத்துகளுடன் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் சஃபாரி மற்றும் ஹாரியர் டார்க் எடிஷன்கள் பிளாக்ஸ்டோன் இன்டீரியர் தீம் மற்றும் பியானோ பிளாக் இன்செர்ட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்ரெஸ்ட்களில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ‘டார்க்’ நிற எழுத்துகளுடன் கூடிய லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளன.

நெக்ஸான் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் 5-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் மேனுவல், 6-ஸ்பீட் ஏஎம்டி மற்றும் 6-ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் அதேசமயம் டீசல் எஞ்சின் 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.

நெக்ஸான் ஈவி Dark மாடலானது 143 BHP எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 40.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கிறது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 465 கிமீ தூரம் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த மாடலின் சிறப்பம்சங்களில் வெஹிகிள்-டு-வெஹிகிள், வெஹிகிள்-டு-லோட், பில்ட்-இந்த ஆப்ஸ், ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃப்ரன்ட் & பேக் லைட் பார்ஸ், 9- ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டஸ்ம், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி கேமரா, கனெக்டட் கார் டெக்னலாஜி, சன்ரூஃப் மற்றும் பல அடங்கும்.

ஹாரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன்கள் 170hp பவரையும், 350Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இவற்றின் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும். ஹாரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய சிறப்பம்சங்களில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7 ஏர்பேக்ஸ், 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஹர்மன் ஆடியோவர்எக்ஸ், டூயல்- ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் விண்டோ ஷேட்ஸ், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப்,வென்டிலேட்டட் முதல் மற்றும் இரண்டாவது ரோ சீட்டுகள் உள்ளிட்ட பல அடங்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *