24 ரன்களுக்கு 4 விக்கெட்.. ஆஸ்திரேலியாவை கதறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. பகல் இரவு டெஸ்டில் அபாரம்
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் வழக்கம் போல் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அந்த அணி தடுமாறியது.
எனினும் இளம் வீரர் ஹாட்ஜ் மற்றும் ஜோஸ்வா டீசல்வா ஆகியோர் அபாரமாக விளையாடி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மீண்டது. அதேபோன்று இறுதியில் கெவின் சின்கிளயர் அரை சதமும் அல்சாரி ஜோசப் 32 ரன்களும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. ஆஸ்திரேலியாவில் ஸ்மித் தற்போது தொடக்க வீரராக களமிறங்கி இருக்கிறார். ஸ்மித் எதிர்கொண்ட 6 பந்துகளில் 6 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லாபஸ்சேன் 3 ரன்களும், கேமரான் கிரீன் 8 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமிரான் கிரீன் மூன்று விக்கெட்டுகளையும் அல்சாரி ஜோசப் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 251 ரன்கள் ஆஸ்திரேலியா தற்போது பின்தங்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை குறைந்த இடத்தில் சுருட்டி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை அடித்தால் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.