கனடாவில் கைப்பற்றப்பட்ட 400 கிலோ போதைப்பொருள்: இந்தோ-கனேடிய டிரக்கரை கைது செய்த அதிகாரிகள்

நாட்டின் எல்லையில் 400 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை கனடா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 400 கிலோ போதைப்பொருள்
சுமார் CA$50 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைபொருட்களை சட்டவிரோதமாக கடத்திய இந்தோ-கனேடிய டிரக்கரை கனேடியன் சட்ட அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

தெற்கு மனிடோபா(Manitoba) போயிசெவெய்ன்(Boissevain) துறைமுகத்தில் வணிக லொறிகளிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது அதிகாரிகள் சுமார் CA$50,780,000 மில்லியன் டொலர் மதிப்புள்ள 406.2 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட மெத்தம்பேட்டமைன்(methamphetamine) என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கனடா எல்லை பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் CBSA தெரிவித்துள்ளது.

மனிடோபா(Manitoba) மாகாண தலைநகரான வின்னிபெக்கை(Winnipeg) சேர்ந்த 29 வயது கோமல்ப்ரீத் சித்து(Komalpreet Sidhu) என்ற இந்தோ-கனேடிய டிரக் சாரதி இந்த போதை பொருள் கடத்தல் சம்பவம் காரணமாக ஜனவரி 14ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Prairie Region பகுதியில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய சட்டவிரோதமான போதைப்பொருள் கைப்பற்றல் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CA$50 million worth 406.2 methamphetamine drug seized by Canada police, Winnipeg resident Indo-Canadian trucker Komalpreet Sidhu arrested for illegal drugs smuggling.Canadian law enforcement, smuggle drugs, Canada Border Services

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *