42 தங்கக் கதவுகள்…. பிரம்…மாண்டமாக களைகட்டத் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்… !

த்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மாநில அரசு உத்தேசித்துள்ளது.

இதற்காக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.அதன்படி கோயில் நுழைவு வாயிலில் தங்க கதவுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோயிலில் முதல் தங்க கதவு நிறுவப்பட்டுள்ளது. கருவறையின் மேல் தளத்தில் 12 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த கதவு பொருத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கி அடுத்தடுத்த 3 நாட்களுக்குள் மேலும் 13 தங்க கதவுகள் நிறுவப்பட உள்ளன. ராமர் கோயிலில் மொத்தம் உள்ள 46 கதவுகளில் 42 கதவுகள் தங்கக்கதவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் அரசு கட்டிடங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

2024ல் முதல் அயோத்தி நகரம், தூய்மையான மற்றும் அழகான நகரமாகத் தோன்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளின் போது தூய்மையான மற்றும் சுகாதாரமான நகரத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியிருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஜனவரி 14 ம் தேதி அயோத்தியில் தூய்மைப் பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் 380 அடி நீளம் 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட 3 அடுக்கு கோவில் இதுவாகும். மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் கொண்ட கோவிலாக உருவாகியுள்ளது. நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் என 5 மண்டபடங்களை கொண்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *