44740000000 ரூபாய் அபராதம்… பெரிய சிக்கலில் மாட்டிய ஆப்பிள் நிறுவனம்… நடந்தது என்ன?
ஆப்பிள் மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்ட உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும். ஆப்பிள் ஐபோன், நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு. அதன் பயனர்கள் பெரும்பாலும் ஆப்பிள் மியூசிக் உட்பட ஆப்பிள் வழங்கும் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை நம்பி உள்ளார்கள். பைனான்சியல் டைம்ஸின் அறிக்கையின்படி, ஆப்பிள் மியூசிக்கின் மிகப்பெரிய போட்டியாளரான Spotify குறிப்பிட்ட ஒரு நடைமுறையைப் பற்றி புகார் அளித்த பிறகு, இந்த பிரச்னை கட்டுப்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இப்போது 44740000000 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஆப்பிள் மியூசிக்கிற்கு எதிரான போட்டியை ஆப்பிளின் கொள்கைகள் முடக்கியதாகக் கூறி 2019ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக Spotify நிறுவனம் புகார் மனு தாக்கல் செய்தது. ஆய்வின் தொடக்கத்திற்குப் பிறகு, டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளுக்குள் தங்கள் சொந்த சந்தா பதிவுகளை கூட இணைக்க மறுக்கும் Apple இன் நடவடிக்கைக்கு எதிரான தனது ஆட்சேபனையை EU குறைத்தது. ஜப்பானில் ஒழுங்குமுறை அழுத்தத்திற்குப் பிறகு 2022-ல் ஆப்பிள் நிறுவனம் தனது கொள்கையை மாற்றியது. அதாவது, ஆப்பிளின் மியூசிக் சேவைக்கு மலிவான மாற்றுகளைப் பற்றி பயனர்களிடம் பிற ஆப்-கள் கூறுவதை ஆப்பிள் நிறுவனம் தடுத்தது என்பதுதான் புகார்.
ரூ. 4,474 கோடி அபராதம் என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. முன்னதாக, 2020ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலிக்கப்பட்டது, ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் நிறுவனத்தின் முறையீட்டிற்குப் பிறகு அதனை சுமார் 366 மில்லியன் டாலர்களாகக் குறைத்தனர்.