45 வயசாச்சா..? முதல்ல இதை படிங்க.. உங்க பணத்தை பாதுகாக்க பெஸ்ட் ஆப்ஷன் இது..!!

பொதுவாக மூத்த குடிமக்கள் முதலீடு என வரும் போது ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதற்கான வயது இது இல்லை.
கையில் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு சிறப்பாக வாழ்வது தான் அவர்களின் விருப்பமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு அட்டகாசமான முதலீடு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: மணி என்பவர் அண்மையில் தனது வேலையில் இருந்து ஓய்வுபெற்றார். வயது 61. ஓய்வு பலன்களின் ஒரு பகுதியாக அவருக்கு ரூ. 20 லட்சம் கிடைத்திருக்கிறது. இதனை கொண்டு பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு வழிகாட்டலாம் வாங்க.. 8.2% வட்டி அளிக்கக் கூடிய திட்டம்: மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக வழங்க கூடிய ஒரு பிரத்யேக சேமிப்பு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தையே மணி அவர்களுக்கு நாம் பரிந்துரைக்கிறோம்.
ஏனெனில் இது மத்திய அரசின் திட்டம் என்பதால் பணம் பாதுகாப்பாக இருக்கும். அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிகளில் எளிதாக இதற்கான கணக்கை தொடங்கலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும் என்பதால் லாபகரமானது. ஒவ்வொரு காலாண்டிற்கும்( ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி ) வட்டி தொகையானது மணியின் கணக்கில் வந்துவிடும். மணி இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியுமா?: 60 வயது பூர்த்தி அடைந்த இந்தியர்கள் மட்டுமே திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மேலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஓய்வுபலன்கள் பெற்ற 1 மாதத்தில் விண்ணப்பிக்க முடியும். மணி 61 வயதுடையவர் என்பதால் இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தால் என்ன லாபம்?: மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் மணி தனது 20 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.முதலீட்டு தொகை = ரூ.20,00,000முதலீட்டு காலம் = 5 ஆண்டுகள்வட்டி = ரூ.1,64,000/ ஆண்டுக்கு (8.2%)காலாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தொகை=ரூ.41,000ரூ.20 லட்சத்துக்கு கிடைக்கும் மொத்த வட்டி = ரூ. 8,20,000 இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மணி ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.41,000ஐ வட்டியாக தனது கணக்கில் பெறுகிறார்.