அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி:“கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் குறித்து பலமுறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

இந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க.வின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா கூட ஊழலை கண்டுபிடிக்க முடியவில்லை.

உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அந்த கோடிகள் எல்லாம் எங்கே போனது?எல்லா பணமும் காற்றில் மறைந்துவிட்டதா?ஊழல் இல்லை என்பதே உண்மை.மதுக்கொள்கை விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை.லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் செய்யக்கூடாது என்பதற்காகவே எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பா.ஜ.க. இப்போது என்னை கைது செய்ய நினைக்கிறது.எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் எனது நேர்மை.ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்ட விரோத சம்மன் அனுப்புவதன் மூலமும், என் மீது அவதூறு ஏற்படுத்தவும், என் நேர்மையைக் கெடுக்கவும் பா.ஜ.க. விரும்புகிறது.

எனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் குறித்து விரிவான விளக்கத்தை அனுப்பியுள்ளேன்.ஆனால் ஒரு வாதத்திற்கு கூட அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை.

இந்த போலி வழக்கில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து சிறையில் உள்ளனர்.அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.அவர்களால் யாருக்கும் எதிராக எதையும் நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் சட்டவிரோத சம்மனை நான் மதிக்க வேண்டுமா?பா.ஜ.க.வின் நோக்கம் நியாயமான விசாரணை அல்ல.மாறாக அரசியல் மிரட்டல்.லோக்சபா தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் செய்வதை தடுக்கவிசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து கைது செய்ய நினைக்கிறார்கள்.

அப்படி செய்தால் லோக்சபா தேர்தலில் என்னால் பிரசாரம் செய்ய முடியாது.அதுவே பா.ஜ.க.,வின் நோக்கமாக உள்ளது,” என்றார். இன்று, 4-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில் மதுபான விற்பனையை தனியார் மயமாக்க டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை கொண்டு வந்தது.ஊழல் புகார் கூறிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் புதிய மதுக் கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது.

இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகளை அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்துள்ளது.இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்கு ரூ.100 கோடி லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது.ஆனால், மூன்று சம்மன்களுக்கும் முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகாததால், அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *