ஜி.டி.பி.,யில் 5.10 சதவீதமாக நிதி பற்றாக்குறை இருக்கும்
வரும் 2024 – 25ம் நிதியாண்டில், நாட்டின் வரி வருவாய் 26.02 லட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும். நிதி பற்றாக்குறை, 5.90 சதவீதமாக இருக்கும் என்று முன்பு மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 5.80 சதவீதமாக மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த நிதியாண்டில், நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.10 சதவீதமாக இருக்கக்கூடும். வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும் விதமாக, மாநிலங்களுக்கு 50 ஆண்டு கால வட்டியில்லா கடனாக 75,000 கோடி ரூபாய் வழங்கப்படும். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னதாக நாடு சந்தித்து வந்த ஒவ்வொரு சவாலையும், சிறப்பான பொருளாதார மேலாண்மையின் வாயிலாக கடந்து வந்துள்ளோம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.