48 மணிநேரத்தில் 5.5 லட்சம் கோடி.. முதல்வர் முக.ஸ்டாலின் திட்டம் இதுதானா..?

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.அனைத்து துறைகளிலும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு இயங்கி வரும் வேளையில் எந்த நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்யப்போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த 2 நாள் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 இல் நடத்தியிருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறது. தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சுமார் 9 கூட்டணி நாடுகளும் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என முக்கிய இலக்கை அடையத் தமிழக அரசு பயணத்தில் தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியமானது.பட்டையை கிளப்பிய மியூச்சுவல் பண்டுகள்.. லாபத்தில் உச்சம், முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!! இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தின் முக்கிய அம்சமே தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தான். தொழில் வளர்ச்சி பெரும்பாலும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது.இந்த நிலையை மாற்றும் முயற்சியாக மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுக்கு அதிகப்படியான முதலீடுகளைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் துவக்கம் தான் வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் தூத்துக்குடி-யில் பேட்டரி தொழிற்சாலை வர உள்ளது.