ஐபோன் பேட்டரி திறனை சோதிக்க 5 ஈசி வழிகள்… ட்ரை பண்ணுங்க!

உங்கள் ஐபோன் சிறப்பான பெர்ஃபார்மன்ஸோடு நீண்டகாலத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்றால், போனின் பேட்டரி நலன் மிகவும் முக்கியமாகும். பொதுவாக பேட்டரியின் திறன் நாளடைவில் குறைந்து, போனின் ஒட்டுமொத்த பெர்ஃபார்மன்ஸை பாதிக்கும். ஆனால் நம் ஐபோன் பேட்டரியின் ஆரோக்கியத்தை மதிப்பிட சில டூல்ஸ்களை வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம். அவ்வப்போது உங்கள் ஐபோன் பேட்டரியின் ஹெல்த்தை செக் செய்வது மற்றும் நல்லமுறையில் சார்ஜ் செய்வதால் நீண்ட நாட்களுக்கு பேட்டரியின் திறன் குறைந்து போகாமல் இருக்கும்.

உங்கள் ஐபோன் பேட்டரி நீண்ட நாட்களுக்கு சிறந்த திறனோடு உழைக்க வேண்டுமென்றால், நாங்கள் கூறும் இந்த எளிமையான 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள். உங்கள் ஐபோன் பேட்டரியின் ஹெல்த்தை சரிபார்க்க இது நிச்சயம் உதவியாக இருக்கும்.

1.செட்டிங்ஸ் மாற்றம்

உங்கள் ஐபோனில் செட்டிங்ஸ் செயலியை திறக்கவும்.

அதில் பேட்டரி என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

பின்னர் அதில் பேட்டரி ஹெல்த் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் போனின் பேட்டரி எவ்வுளவு நேரம் தாக்குப்பிடிக்கும் மற்றும் அதன் உச்சபட்ச பெர்ஃபார்மன்ஸ் திறன் போன்ற முக்கியமான தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

இதில் உங்கள் பேட்டரி திறன் அதிகபட்சமாக இருந்தால், பேட்டரியின் நலன் சிறப்பாக இருப்பதாக அர்த்தம்.

பேட்டரி பயன்பாடு குறித்த புள்ளிவிபரங்கள்

செட்டிங்ஸ் செயலியில் பேட்டரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

அதில் உங்கள் பேட்டரி பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யவும்.

உங்கள் பேட்டரியின் திறனை ஏதாவது செயலி அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தெரிந்தால், பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.

செயலியின் பேக்கிரவுண்ட் செயல்பாட்டை பரிசோதியுங்கள் அல்லது குறிப்பிட்ட செயலியை அப்டேட் செய்யுங்கள்.

Coconut பேட்டரி (ஐமேக்கிற்கு மட்டும்)

உங்களிடம் ஐமேக் கணினி இருந்தால், அதில் CoconutBattery என்ற செயலியை பயன்படுத்தலாம்.

ஐமேக் கணினியோடு உங்கள் ஐபோனை கனெக்ட் செய்து, CoconutBattery செயலியை இயக்குங்கள்.

உங்கள் ஐபோன் பேட்டரியின் ஆரோக்கியம், அதன் அதிகப்பட்ச திறன் போன்றவற்றை இந்த செயலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Third-Party செயலிகள்

உங்கள் பேட்டரியின் ஆரோக்கியத்தை கண்காணிக்க ஆப்பிள் ஸ்டோரில் பல third-party செயலிகள் உள்ளன.

அதில் நன்கு மதிப்பாய்வு பெறப்பட்ட செயலியை தேர்ந்தெடுக்கவும். நிச்சயம் இதன் மூலம் உங்கள் பேட்டரியின் உண்மை நிலையை தெரிந்துகொள்ள முடியும்.

எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராமல் இருக்க பிரபலமான செயலிகளை தேர்ந்தெடுக்கவும்.

iCloud பேட்டரி பயன்பாடு

எல்லாவித கனெக்டெட் சாதனங்களின் பேட்டரி பயன்பாட்டையும் தெரிந்துகொள்ளும் வசதி iCloud-ல் உள்ளது.
உங்கள் ஆப்பிள் ஐடி-யை பயன்படுத்தி போனில் உள்ள செட்டிங்ஸை திறந்து iCloud செல்லுங்கள்.

அதில் பேட்டரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், உங்கள் ஐபோன் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரி சதவிகிதம் தெரிய வரும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *