அடாவடி கொலஸ்ட்ராலை அட்டகாசமாய் குறைக்கும் 5 மாஸ் மஞ்சள் பழங்கள்

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் பலவித உடல்நல கோளாறுகள் ஏற்படும். கொலஸ்ட்ராலின் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். நம் உடலில் இரு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று HDL, இது நல்ல கொலஸ்ட்ரால் என்று கருதப்படுகின்றது. மற்றொன்று LDL, இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.

ரத்தத்தில் இந்த இரு வகை கொலஸ்ட்ராலின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். எனினும் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் (Bad Cholesterol) அளவு அதிகரித்தும், நல்ல கொலஸ்ட்ராலின் (Good Cholesterol) அளவு குறைந்தும் இருந்தால் நரம்புகளில் பிரச்சனை ஏற்பட துவங்கும்.

அதிக காலத்திற்கு இந்த பிரச்சனை இருந்தால் நரம்புகளில் அடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது இரத்த அழுத்தத்திற்கு காரணமாகின்றது. ஆகையால் எப்போதும் கொலஸ்ட்ரால் அளவை சரியான அளவில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகின்றது.

எளிய வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இதில் பழங்களுக்கும் காய்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஐந்து மஞ்சள் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தப் பழங்களை உயர் கொலஸ்ட்ரால் (High Cholesterol) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி

பப்பாளிப்பழம் (Papaya) பலவித நன்மைகளை அளிக்கிறது. இது செரிமானத்தை சீராக்கி வளர்ச்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகின்றது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு பப்பாளி மிக உதவியாக இருக்கும். கொலஸ்ட்ரால் நோயாளிகள் இதை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க அவர்களுக்கு உதவி கிடைக்கும். பிளட் கிளாகிங் அதாவது இரத்தம் உறைதல் பிரச்சனைக்கும் பப்பாளி பழம் தீர்வாக அமைகின்றது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் (Banana) பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. நரம்புகளில் ஏற்படும் துடிப்புகளை சரி செய்து இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கின்றது. உயர் கொலஸ்ட்ரால் நோயாளிகள் கண்டிப்பாக தினமும் வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் (Pineapple) ப்ரோமோலெய்ன் எனப்படும் ஒரு ஆக்டிவ் காம்பவுண்ட் உள்ளது. இது நரம்புகளில் படிந்து இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் உடலுக்கு உதவியாக இருக்கிறது. இதன் காரணமாக இதய நோயாளிகளுக்கும் இந்த பழம் ஏற்றதாக கருதப்படுகின்றது.

தாட்பூட் பழம்

பேஷன் ஃப்ரூட் (Passion Fruit) என்று அழைக்கப்படும் தாட்பூட் பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கசுதப்படுகின்றது. இதில் வைட்டமின் ஏ போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த பழமாக கருதப்படுகின்றது

எலுமிச்சை

வைட்டமின் சி, ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் மற்றும் பல என்சைம்கள் நிரம்பி உள்ள எலுமிச்சை நரம்புகளை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறது. இது நரம்புகளில் படிந்திருக்கும் அழுக்கை நீக்கி கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி எலுமிச்சை நல்ல கொலஸ்ட்ராலின் (Good Cholesterol) அளவையும் அதிகரிக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *