5 புதிய வேரியன்ட்ஸ்.. புதிய ரெனால்ட் கார்களின் சிறப்பம்சங்கள்!

ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட 2024 ரெனால்ட் கைகர், 2024 ரெனால்ட் க்விட் மற்றும் 2024 ரெனால்ட் ட்ரைபர் உள்ளிட்டவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேற்காணும் 3 கார்களும் சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள், கூடுதல் வேரியன்ட்ஸ்கள், புதிய கலர் ஆப்ஷன்கள், புதிய அம்சங்கள் மற்றும் பலவற்றுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளன.

இந்த புதிய ரேஞ்சில் 10-க்கும் மேற்பட்ட புதிய அம்சங்கள் மற்றும் Easy-R AMT தொழில்நுட்பத்துடன் கூடிய நாட்டின் மிக மலிவு விலை ஆட்டோமேட்டிக் கார் உட்பட 3 மாடல்களுக்கு இடையே 5 புதிய வேரியன்ட்ஸ்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

2024 Kiger காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ 6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை இருக்கிறது. இந்த காரில் புதிய செமி-லெதரெட் சீட்கள் மற்றும் லெதரெட் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய 2024 Kiger வாடிக்கையாளர்களுக்கு அதிக பிரீமியம் அனுபவத்தையும் மேம்பட்ட வசதியையும் வழங்குகிறது. இந்த புதிய மாடல் காரில் கொடுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப அம்சங்களில் ஆட்டோ ஃபோல்ட் அவுட் ரியர்-வியூ மிரர்ஸ் (ORVM) மற்றும் பெசல்-லெஸ் ஆட்டோடிம் இன்சைட ரியர்-வியூ மிரர் (IRVM) கொண்ட வெல்கம்-குட்பை சீக்வென்ஸ் உள்ளிட்டயவை அடங்கும்.

இதன் டர்போ ஆப்ஷனில் ரெட் பிரேக் காலிப்பர்ஸ் உள்ளன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 2024 கிகர் மாடல் அதிக அம்சங்களுடன் வருகிறது. இதில் ஆட்டோ ஏசி, RXT(O) வேரியன்ட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பவர்-ஃபோல்டு ORVM-க்கள், RXZ எனர்ஜி வேரியன்ட்டில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் LED கேபின் லைட்ஸ் உள்ளிட்டவை அடக்கம். அதே போல இதன் அனைத்து வேரியன்ட்ஸ்களும் இப்போது ரியர் சீட்பெல்ட் ரிமைன்டரை கொண்டுள்ளன. மேலும், இந்த லைன்அப்பானது எனர்ஜி எம்டி மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி பவர்டிரெய்ன்களுடன் கூடிய புதிய RXL வேரியன்ட்டையும், டர்போ மேனுவல் மற்றும் எக்ஸ்-டிரானிக் சிவிடி பவர்டிரெய்னுடன் கூடிய RXT(O) வேரியன்ட்டையும் பெறுகிறது.

 

புதிய 2024 ட்ரைபர் ரேஞ்ச்சானது டிரைவர் சீட் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பவர்ஃபோல்டிங் ORVM-க்கள் போன்ற வசதியை மேம்படுத்தும் அம்சங்களை சேர்த்துள்ளது. 2024 ட்ரைபரின் துவக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6 லட்சம் முதல் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.75 லட்சம் வரை இருக்கிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆன்-போர்டு தொழில்நுட்ப அம்சங்களில் 7-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டயவை அடங்கும்.

RXT வேரியன்ட் இப்போது ரியர்வியூ கேமரா மற்றும் ரியர் வைப்பருடன் வருகிறது. அதே நேரம் RXL வேரியன்ட், 2-வது மற்றும் 3-வது வரிசைகளுக்கான பிரத்யேக AC கன்ட்ரோல் மற்றும் வென்ட்கஸ் மற்றும் அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் சேர்க்கப்பட்டுள்ள LED கேபின் விளக்குகளுடன் ரியர் AC-யுடன் வருகிறது. இந்த வாகனத்தில் PM2.5 ஏர் ஃபில்டரையும் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அனைத்து வேரியன்ட்களிலும் இப்போது ரியர் சீட்பெல்ட் ரிமைண்டர் இடம்பெற்றுள்ளது.

2024 Kwid மாடலின் பேஸ் வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 4.70 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியன்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 5.95 லட்சம் வரை செல்கிறது. இந்த ஹேட்ச்பேக் இப்போது அதன் க்ளைம்பர் வேரியன்ட்டிற்கு 3 புதிய டூயல்-டோன் எக்ஸ்டீரியர் பாடி கலர்களை பெறுகிறது. புதிய அம்சங்களை பொறுத்தவரை இதன் RXL(O) வேரியன்ட்டில் 8-இன்ச் டச்ஸ்கிரீன் மீடியா NAV சிஸ்டம் உள்ளது. மேலும் 2024 Kwid ரேஞ்சசில நிறுவனம் RXL(O) Easy-R AMT வேரியன்ட்டை அறிமுகப்படுத்துகிறது,

இது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான ஆட்டோமேட்டிக் காராக இருக்கும். 2024 Kwid மாடலின் அனைத்து வேரியன்ட்ஸ்களும் இப்போது ரியர் சீட்பெல்ட் ரிமைண்டரை கொண்டுள்ளன. 14-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், கிவிட் மாடல் பெஸ்ட்-இன்-கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மேலும் ரெனால்ட் இந்தியா நிறுவனமானது தனது 2024 மாடல் ரேஞ்ச்களுக்கு 2 வருட நிலையான உத்தரவாதத்தையும், 7 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *