கட்டிப்பிடிக்கும்போது உடம்புக்குள் நடக்கும் 5 சூப்பர் விஷயங்கள்… கட்டாயம் தெரிஞ்சிக்கணும்…
கட்டிப்பிடிப்பது போன்ற இனிமையான அனுபவம் வேறு எதுவும் கிடையாது என்று சொல்லலாம். காதலிக்கும் நபருக்கு மட்டுமின்றி, குடும்பத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் என எல்லோரையும் கட்டியணைத்து நம் அன்பை வெளிப்படுத்த முடியும். பொதுவுாக காதலைத் தவிர, மற்ற இடங்களில் பாராட்டு, விடை பெறுதல் போன்றவற்றை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்போம்.
இந்த கட்டிபிடித்தல் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? நம்முடைய வாழ்வில் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்குமாம். அதுதவிர கீழ்வரும் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
மன அழுத்தம், உடல் வலிகளை குறைக்கும்
கட்டியணைக்கும் போது மனதில் ஒருவித ரிலாக்ஸை உணர்வோம். அது மனதை இலவாக்கும். இதற்கும் அறிவியலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
கட்டிப்பிடிக்கும்போ நம்முடைய உடலில் ஆக்சிடாக்ஸின் சுரப்பு அதிகரிக்கும். இது உடல் முழுவதையும் ஆக்கிரமிக்கும். அதுதான் கட்டிப்பிடிக்கும் போது உண்டாகிற ஒருவித உணர்வை நமக்குத் தருகிறது. செல்லப்பிராணிகளையோ, மனதுக்குப் பிடித்தவர்களையோ கட்டிப்பிடிக்கும்போது இந்த விளைவு அதிகமாக நடக்கிறது.
இன்ஃபிளமேஷன்கள் குறைய
தினமும் கட்டிப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனம் இலகுவாக இருக்கும்போது மலச்சிக்கல், குடல் அழற்சியால் ஏற்படும் வலிகள் குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
உடல் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கிறது.
உடல் உள்ளுறுப்புகளை ஹீலிங் செய்யும்.
இதயத் துடிப்பை சீராக்கும்.
மது, போதை பொருள், இனிப்பு மீதான கிரேவிங்கை தடுக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும்
ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டியணைத்தால் டாக்டரையே பார்க்கத் தேவையில்லையாம். ஆமாங்க… கடந்த 2014 ஆம் ஆண்டு கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் 400 முதியவர்கள் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,
தொடர்ச்சியாக அவர்கள் தினமும் இரண்டு வாரங்கள் தனக்கு பிடித்தவர்களைக் கட்டிப்பிடித்து வந்திருக்கிறார்கள். இரண்டு வாரத்தின் முடிவில் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.
அவர்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, உடலில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படும் ஆபத்து வெகுவாகக் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. பிறகென்ன, கட்டிப்பிடிங்க… நோயில்லாம வாழுங்க…
மன மகிழ்ச்சி தரும்
ஒருவரை ஒருவர் கட்டியணைக்கும் போது, உடலில் செரோடோனின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதுதான் நம்முடைய உடலில் தோன்றும் ஹேப்பி ஹார்மோன்.
இந்த ஹார்மோன் மூளையில் உள்ள நியூரான்களால் உற்பத்தி செய்யப்பட்டு பரவுகிறது. செரோடோனின் நம்மை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நம்பிக்கையுடனும் உணர உதவுகிறது.
செரடோனின் உற்பத்தி அதிகரிக்கும்போது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் குறைந்து மனம் மகிழ்ச்சி அடையும்.
செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க பல மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தினமும் கட்டிப்பிடிப்பதன் மூலம் அது தானாக நடக்கும்.
உறவின் ஆழத்தை அதிகரிக்கும்
நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒருவரைக் கட்டியணைக்கும் போது மிக ஆறுதலாகவும் பாதுகாப்பு உணர்வோடும் இருப்போம்.
கட்டிப்பிடிப்பதன் மூலம் அந்த உறவின் மீதான ஆழம் அதிகரிக்கும். வாழ்க்கை இனிமையாகும்.