கோவையில் அசத்திய 50 வயது முன்னாள் மாணவர்!

கோவை நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 – 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக இருந்து படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்ததும் பலரது முகத்திலும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், பூரிப்பும் காணப்பட்டது. ஒருவருக்கொருவர் அடையாளம் காண முடியாமல் பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டு அடையாளத்தை, நட்புகளை பாசத்தோடு புதுப்பித்துக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் 1990 ஆம் ஆண்டு படித்த கார்த்தி என்ற கூடுலூரை சேர்ந்த மாணவன், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக அன்றைய காலகட்ட பள்ளி சீருடையான காக்கி அரைக்கால் டவுசர் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது போல் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து மேடையில் அமர்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் கோவை கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வெகுவாக பாராட்டி தற்பொழுது இருக்கக்கூடிய காலச் சூழ்நிலைக்கேற்ப விழுப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும், மேலும் இது போன்ற மாணவர்கள் அரசு நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள் நல பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *