5 ஆண்டுகளில் 54,000% லாபம்… அதிசயத்தை நிகழ்த்திய பிரவேக் லிமிடெட் பங்கு..
ஆச்சரியம், அதிசயம் நிகழும் இடம் என்றால் அது பங்குச் சந்தை தான். ரிஸ்க் அதிகம் தான் ஆனால் நினைத்து பார்க்க முடியாத லாபத்தை பங்குகள் கொட்டி கொடுக்கும்.
ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை பங்குகள் சில ஆண்டுகளிலேயே கொடுத்து விடும்.அதற்கு உதாரணமாக பிரவேக் லிமிடெட் பங்கினை சொல்லலாம். இந்த பங்கு 5 ஆண்டுகளில் 500 அல்ல 1,000 அல்ல 54,000 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்த பங்குகளில் சில ஆயிரங்கள் முதலீடு செய்து இருந்தால் இன்று பல லட்சங்களாக உயர்ந்திருக்கும்.
குஜராத்தை சேர்ந்த பிரவேக் லிமிடெட் நிறுவனம் கண்காட்சி மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மற்றும் வெளியீடு போன்ற பல்வேறு வணிகபிரிவுகளில் வலுவான வர்த்தகத்தை கொண்டுள்ளது. அயோத்தி, ரான் ஆஃப் கட்ச், வாரணாசி, டாமன் அண்ட் டையூ மற்றும் சர்தார் சரோவாா உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு கூடார நகரங்கள் மற்றும் சொகுசு ஓய்வு விடுதிகளை போன்ற சேவைகளை வழங்குகிறது.இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக உள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் பிரவேக் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.84.38 கோடியும், நிகர லாபமாக ரூ.28.38 கோடியும் ஈட்டியுள்ளது.பிரவேக் லிமிடெட் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 54,000 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த புதன்கிழமையன்று (10ம் தேதி) வர்த்தகத்தின் இடையே பிரவேக் லிமிடெட் நிறுவன பங்கு புதிய 52 வார உயர்வான ரூ.1,300.00 விலையை எட்டியது.ஒரே ஆண்டில் 200% லாபம்.. பட்டைய கிளப்பும் மல்டிபேக்கர் பங்கு முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் 2019 ஜனவரியில் இப்பங்கின் விலை ரூ.2.40ஆக இருந்தது. அப்போது இந்நிறுவன பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் இப்போது அது ரூ.54 லட்சமாக உயர்ந்திருக்கும்.
கடந்த ஓராண்டில் இப்பங்கு 330 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. 2024ல் இதுவரை இப்பங்கின் விலை 75 சதவீதம் உயர்ந்துள்ளது.2023 டிசம்பரில், லட்சத்தீவின் அகத்தி தீவில் குறைந்தது 50 கூடாரங்களின் மேம்பாடு, செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான பணி ஆணையை பெற்றுள்ளதாக பிரவேக் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.போனஸ் பங்கு அறிவிக்கும் ஸ்மால்கேப் நிறுவனம்.. அட பிரபல முதலீட்டாளர் கூட முதலீடு செய்திருக்கிறாரே..!!