உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டாடா, அதானி குழுமம் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்கிறது.
சென்னையில் இரண்டு நாள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடிக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம்நேரடியாகவும், மறைமுகமாக வும் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது. இதில், அதிகபட்சமாக டாடா குழுமத்தின் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெ நிறுவனம் ரூ.70,800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்தபடியாக அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500 கோடி, அம்புஜாசிமெண்ட் ரூ.3,500 கோடி, அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடி, டோட்டல் காஸ் & சிஎன்ஜி ரூ.1,568 கோடி என அதானி குழும நிறுவனம் மொத்தம் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப் பந்தம் மேற்கொண்டுள்ளது. செம்பகார்ப் நிறுவனம் ரூ.37, 538 கோடிக்கும், டாடா எலெக்ட் ரானிக்ஸ் ரூ.12,082 கோடிக்கும், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 12,000 கோடிக்கும். ஹூண்டாய் நிறுவனம் ரூ.6,180 கோடிக்கும், டிவிஎஸ் நிறுவனம் ரூ.5,000 கோடிக்கும், செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடிக்கும், பெகாட்ரான் ரூ.1,000 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது.