OTT யில் இந்த வாரம் தவற விடக் கூடாத 7 படங்கள்.. நேரடியாக ரிலீசாகும் மோகன்லால் படம்!

தியேட்டரைப் போன்று ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. 5க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் இருந்தாலும் அவற்றுக்கு சந்தா செலுத்தி சினிமா ரசிகர்களை படங்களை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களையும் அவற்றின் ட்ரெய்லர்களையும் பார்க்கலாம்.
மலைக்கோட்டை வாலிபன் – மோகன்லால், சோனாலி குல்கர்னி முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 23 ஆம் தேதி வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் மோகன் லால் ரசிகர்கள் இந்த படத்தின் வெளியிட்டை எதிர்பார்த்துள்ளனர்.
பவர் புக் 3 – லயன்ஸ்கேட் ஓடிடியில் பிப்ரவரி 23 இல் வெளியாகிறது. பாட்டினா மில்லர், மால்கம் மேஸ் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர்.
அபார்ட்மென்ட் 404 – ஜென்னி, யூ ஜே சுக், சா டே ஹியூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள இந்த தொடர் அமேசான் ப்ரைமில் பிப்ரவரி 23 ஆம் தேதி ரிலீசாகிறது.
அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் – கோர்டன் கார்மியர், டல்லாஸ் லியூ, இயன் ஓஸ்ஸி, பால் சன் ஹியூங் லீ உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று நெட் ஃப்ளிக்ஸில் வெளிவந்துள்ளது.
தி இந்திராணி முகர்ஜி ஸ்டோரி – இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்திராணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பிப்ரவரி 23 ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.
சா எக்ஸ் – லயன்ஸ்கேட் தளத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் புற்று நோய்க்கு வித்தியாசமான சிகிச்சையை மேற்கொள்ளும் கதையை அடிப்படையாக கொண்டது.
போச்சர் – நிமிஷா சஜயன், திபியேந்தி, ரோஷன் மேத்யூ நடித்துள்ள இந்த தொடர் காடுகளில் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீசாகிறது.