டிச.31 வரை 8.18 கோடி பேர் வருமான வரி கணக்குகள் தாக்கல்

கடந்த ஆண்டில் இதே தேதியில் (31.12.2022) 7.51 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருந்ததாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் மொத்த வருமான வரி தாக்கல் செய்தவர்களைவிட 9% அதிகமாகும்.

அனைத்து தாக்கல்களிலும் தரவின் கணிசமான பகுதி சம்பளம், வட்டி, ஈவுத்தொகை, தனிப்பட்ட தகவல்கள், டி.டி.எஸ் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட வரி செலுத்துதல், கொண்டு வரப்பட்ட இழப்புகள், எம்.ஏ.டி கிரெடிட் போன்றவை தொடர்பான தரவுகளுடன் முன்கூட்டியே நிரப்பப்பட்டது. இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வருமான வரியை இலகுவாகவும் விரைவாகவும் தாக்கல் செய்ய முடிந்தது

.மேலும், இந்த நிதியாண்டின் போது, டிஜிட்டல் மின்-கட்டண வரி செலுத்தும் தளம் – டிஐன் 2.0 இ – ஃபைலிங் இணையதளம் முழுமையாக செயல்பட்டது. இது இன்டர்நெட் பேங்கிங், நிஃப்ட் / ஆர்டிஜிஎஸ், ஓடிசி, டெபிட் கார்டு, பேமெண்ட் கேட்வே மற்றும் யுபிஐ போன்ற மின்னணு முறையில் வரி செலுத்துவதற்கான பயனருக்கு ஏற்ற நடைமுறைகளைச் செயல்படுத்தியது. டிஐஎன் 2.0 இயங்குதளம் வரி செலுத்துவோருக்கு நிகழ்நேர வரிகளை வரவு வைக்க உதவியது, இது வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்கியது.

வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி மற்றும் படிவங்களை முன்கூட்டியே தாக்கல் செய்வதை ஊக்குவிப்பதற்காக, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் பிற ஆக்கபூர்வமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *