ஓராண்டு எஃப்.டி-க்கு 9% வட்டி; சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
இந்தியாவில் உள்ள அனைத்து சிறு நிதி வங்கிகளில் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த வங்கி ஜனவரி 02, 2024 அன்று, ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை திருத்தியது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது முதியோர்களுக்கு 9.00% வட்டியை வழங்குகிறது. வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 8.50% வட்டியை வழங்குகிறது.
ஜனா ஸ்மால் வங்கி வட்டி விகிதம்
ஜனா ஸ்மால் வங்கி 7-14 நாட்களில் முதிர்ச்சியடையும் உள்நாட்டு சில்லறை கால வைப்புகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் 15-60 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு 4.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 61-90 நாட்கள் டெபாசிட் கால எஃப்.டி-க்களுக்கு 5.00% வட்டி விகிதம் கிடைக்கும்.
தொடர்ந்து, 91-180 நாட்கள் எஃப்.டிக்கு 6.50% ஆகும். மேலும், 181-364 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 8.00% ஆகவும், 365 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போது 8.50% ஆகவும் உள்ளது.
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை (730 நாட்கள்) முதிர்ச்சியடையும் உள்நாட்டு சில்லறை டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 8.25% வட்டி விகிதத்தையும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை (1825 நாட்கள்) முதிர்ச்சியடையும் எஃப்.டிக்களுக்கு 7.25% வட்டி விகிதத்தையும் ஜனா ஸ்மால் வங்கி வழங்குகிறது.
ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.50% ஆக இருக்கும். மேலும், குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்கள், ஜனா SFB இல் அனைத்துக் காலங்களிலும் நிலையான விகிதங்களை விட 50 bps கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.