விசா இல்லாமல் ஜேர்மனியில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம்: ஒரு நாட்டினருக்காக மட்டும் விசேஷ அறிவிப்பு…

இஸ்ரேல் குடிமக்கள், விசா இல்லாமல் மேலும் 90 நாட்கள் ஜேர்மனியில் தங்கியிருக்கலாம் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.
குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டிய அவசியமில்லை
அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, ஜேர்மனியில் தங்கியிருக்கும் இஸ்ரேல் குடிமக்கள், ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிவரை குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்காமலே ஜேர்மனியில் தங்கியிருக்கலாம். அவர்கள் விசா நீட்டிப்புச் செய்யவும் அவசியமில்லை என, ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மக்கள். ஜனவரி 26 முதல் ஏப்ரல் 26 வரை, 90 நாட்களுக்கு விசா இல்லாமலே ஜேர்மனியில் தங்கியிருக்கலாம்.
இந்த விதியின் மூலம், இஸ்ரேல் குடிமக்கள் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜேர்மனியில் தங்கியிருக்க வழிவகை செய்கிறோம் என்று கூறியுள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, அவர்கள் இந்த காலகட்டத்துக்காக, குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமுமில்லை, விசா நீட்டிப்புச் செய்யவேண்டிய அவசியமுமில்லை என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் மக்கள் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.