5 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி!

மேற்கு ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து நிலச்சரிவாலும் கட்டிட இடிபாடுகளாலும் 126 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தப் பேரிடர் ஏற்பட்ட 124 மணி நேரத்திற்கு பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

ஜப்பானை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், திங்கள்கிழமை தாக்கியது. இஷிகவா மாகாணம் சுஸு நகரத்தில் வாழ்ந்துவருகிற மூதாட்டி 5 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

72 மணி நேரத்திற்குப் பிறகு பிழைத்திருக்கிற வாய்ப்பு குறைய தொடங்கிவிடும் என்கிறபோதும் மீட்பு பணிகளில் சில நம்ப முடியாதவை நிகழக்கூடும்.

நிலநடுக்கத்தின்போது கொதிக்கிற நீர் மேலே பட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

வாஜிமா பகுதியில் மீட்புப் பணியில் காவலர்கள் | AP

சாலை மட்டத்திற்கு வீட்டின் கூரைகள் தகர்ந்த நிலையில் மழையும் பனிப்பொழிவும் இன்னும் மீட்பு பணிகளைச் சிக்கலாக மாற்றிவருகிறது. விமானங்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. 200-க்கும் மேற்பட்டவர்களின் நிலையை அறிய இயலவில்லை.

முன்னெப்போதும் இல்லாத, வடகொரியாவின் அனுதாபம் ஜப்பானுக்கு இந்த முறை கிடைத்துள்ளது. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவ முன்வந்துள்ளது.

30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானிய செய்தித்தாளான யோமியுரி, அந்தப் பகுதியில் 100-க்கும் அதிகமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முக்கிய இணைப்பு சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்கள் இன்னும் தனித்தும் உதவிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *