இதுவரை எந்த படத்திலும் நடித்திடாத மாறுபட்ட கேரக்டரில் எமி ஜாக்சன்
லைகா நிறுவனம் தயாரிப்பில் தமிழில் மொழியில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இயக்கிவரும் படம் தான் “மிஷன் சாப்டர் -1”.
இத்திரைப்படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், மற்றும் நிமிஷா சஜயன், அலி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்க்ஷன் திரில்லர் கதைகளத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகின்றனர். இப்படத்தில் எமிஜாக்சன் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்திடாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு பல படங்கள் வரிசைக்கட்டு நிற்கும் நிலையில், இந்த படமும் அந்த வரிசையில் உள்ளது.
இந்நிலையில் இவர் நடிக்கும் போது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளின் வீடியோவை லைகா தயாரிப்பு நிறுவனம் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் எமிஜாக்சனா இது என கமெண்ட் தட்டி வருகின்றனர்.