நயன்தாராவின் ‘அன்னபூரணி’ மீது வழக்கு!
சென்னை: நடிகை நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’.ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியானது.
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார்.இந்தப் படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸிலும் வெளியானது.
இந்நிலையில், இந்தப் படம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகத்தை ஆதரிப்பதாகவும் மும்பையைச் சேர்ந்த சிவசேனாவின் முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஃபர்ஜான், நாயகி இறைச்சி சாப்பிட ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூற, பாதிரியாரின் மகளான நாயகி நமஸ்காரம் செய்கிறார்.
இந்த படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.