அவதூறு வழக்குக்கு தடை கோரி கங்கனா ரனாவத் மனு
மும்பை: நடிகை கங்கனா ரனாவத்தும், இந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷனும் ‘க்ரிஷ் 3’ படத்தின் இணைந்து நடித்தனர்.
அப்போது இருவரும் காதலித்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான சர்ச்சையில், தான் கங்கனாவை காதலிக்கவில்லை என்று ஹிர்த்திக் மறுத்திருந்தார். இருவரும் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பினர்.
இதுதொடர்பாக, சேனல் ஒன்றுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பேட்டியளித்த கங்கனா ரனாவத், இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி அவதூறாக சில கருத்துக்களைச் சொன்னார். இதை எதிர்த்து ஜாவேத் அக்தர், மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கங்கனா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்துள்ளார். வரும் 9-ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.