எம்ஜிஆர் ஆட்சியின் பொழுது கர்நாடகா தண்ணீர் திறக்க எம்ஜிஆர் செய்த தந்திரம்!

ப்பொழுதும் கர்நாடகா தமிழ்நாடு பிரச்சினை தீந்த பாடு இல்லை. 1978 ஆம் ஆண்டுகளின் பொழுது எம்ஜிஆர் ஆட்சி செய்த காலம்.

அந்த காலத்தில் மிகவும் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்ப்படனர். அப்பொழுது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டபோது தண்ணீர் வரவில்லை.

எம்ஜிஆர் செய்த செயலால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்துள்ளது.

வழக்கம்போல் ஒருமுறை அறிவித்த பொழுது கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க விட மறுத்துவிட்டது. இதனால் எம்ஜிஆர் என்ன பண்ணி இருக்கிறார்? என்றால், எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி நேரடியாக முதலமைச்சரின் வீட்டுக்கே சென்றுள்ளார்.

அப்போதைய கர்நாடக முதல் அமைச்சர் திரு ராமகிருஷ்ணா ஹெக்டே வீட்டிற்கே சென்று விட்டார் MGR.

அவரைப் பார்த்த ராமகிருஷ்ணா அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கை கால் ஏதும் ஓடவில்லை.

“வாங்கோ அண்ணா வாங்கோ” என்று வீட்டிற்குள் அழைத்து அமர வைத்திருக்கிறார். அவர் மனைவியும் “வாங்கோ அண்ணா” என்று உள்ளே அழைத்திருக்கிறார்.

ராமகிருஷ்ணாவின் மனைவி உடனே என்ன சாப்பிடுகிறீர்கள்? அண்ணா! என்று கேட்க, எம்ஜிஆர் இடியாப்பம் என்று சொல்லியுள்ளார்.

உடனே இடியாப்பமும் சூடாக அவிக்கப்பட்டு தயாராகிறது.

இருவரும் அன்போடு தலைவருக்கு இடியாப்பம் பரிமாறுகிறார்கள். அதை சாப்பிட்டுக் கொண்டே இருந்த எம்ஜிஆர் க்கு திடீரென்று விக்கல் வருகிறது.

ராமகிருஷ்ணா அவர்கள் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி குடிங்க அண்ணா என்று கொடுத்திருக்கிறார். எம்ஜிஆர் அதை வாங்கி குடிக்க மறுத்துவிட்டார்.

விக்கல் அதிகமாகவே ராமகிருஷ்ணா அவர்கள் அண்ணா தண்ணீர் குடிங்க. இல்லையென்றால் இன்னும் விக்கல் அதிகமாகும் என்று கூற, இந்தத் தண்ணீருக்கு தானே என் மக்கள் அங்கு தவிக்கிறார்கள். ஆனால் இந்த தண்ணீரை குடிக்க எனக்கு மனம் வரவில்லை என்று எம்ஜிஆர் சொல்லி இருக்கிறார்.

இந்த தண்ணீருக்காக தான் எங்கள் ஊரு மக்களும் தவிக்கிறார்கள், அவர்களுக்கு தண்ணீர் இல்லாதபோது நான் மட்டும் இந்த தண்ணியை குடிக்கலாமா” என்றாராம் ,

உடனே ஹெக்டே அவர்கள் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் படி தன் அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டாராம் . எந்த ஒரு சண்டையும் ,கலவரமும் இல்லாமல் தன் ராஜதந்திரத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வந்தார் தலைவர் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *