18ம் தேதி தொடங்குகிறது கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’
சென்னை: கடந்த 1987 அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘நாயகன்’.
தற்போது 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு ‘தக் லைஃப்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், நாசர், ‘விருமாண்டி அபிராமி’ உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கமல்ஹாசன் நடிக்கும் 234வது படமான இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு வரும் 18ம் தேதி முதல் சென்னையில் தொடங்கி நடக்கிறது என்று கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்த கமல்ஹாசன், நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.