ராம் சரண், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து உருவாகும் பான் இந்தியா படம்
ஐதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வரும் ராம் சரண், அடுத்து புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்கிறார்.
புச்சி பாபு சனா தனது ‘உப்பென்னா’ என்ற படத்துக்காக தேசிய விருது வென்றார். இந்த நிலையில் ராம் சரண், புச்சி பாபு சனா இணையும் பான் இந்தியா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்குகிறது.
விருத்தி சினிமாஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இப்படத்தின் மூலமாக வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பாளர் ஆகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘உப்பென்னா’ படம் மியூசிக்கல் ஹிட்.
அதுபோல், புச்சி பாபு சனாவின் 2வது படமும் மியூசிக்கல் சார்ட் பஸ்டராக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது. இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகிறது.