Ajith – அஜித் ஒரு வேற்று கிரகவாசி.. ஏகேவை விளாசித் தள்ளிய தங்கர் பச்சான்.. அப்படி என்ன கோபம்
சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது.
கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். ஏகே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துணிவு படம் எப்படி ஹிட் ஆனதோ அதேபோன்றொரு வெற்றியை கண்டிப்பாக விடாமுயற்சி திரைப்படமும் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஜித்குமார்.
போல்டு அஜித்: திரைத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர் அஜித். பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார், ரசிகர்களை சந்திக்கமாட்டார், பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளமாட்டார். இவை அனைத்துக்கும் பட தயாரிப்பு நிறுவனம் ஓகே சொன்னால்தான் படத்தில் நடிக்கவே ஒத்துக்கொள்வார். இதனாலேயே அஜித்துக்கான மவுசு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.