Vishal – விஷாலுக்கும் உதயநிதிக்கும் மனக்கசப்பா?.. அதனால்தான் விஷால் கலந்துகொள்ளவில்லையா?.
சென்னை: விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துவருகிறார்.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்
செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு பட்டாசு ரகம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கைத்தட்டி என்ஜாய் செய்தனர். படம் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த படம்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.
நட்பு: இதற்கிடையே விஷாலும், உதயநிதி ஸ்டாலினும் கல்லூரியில் படிக்கும்போதிருந்தே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருமே தங்களது நட்பை பல முறை மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருப்பினும் கடந்த சில காலமாகவே இரண்டு பேருக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டதாக திரைத்துறையில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. லத்தி, மார்க் ஆண்டனி என விஷால் நடித்த படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.