Parenting Tips : ஆட்டிச குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இதோ எளிய வழிகள்!
Parenting Tips : ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவது எப்படி? எது அவர்களை சிறப்பாக்குகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் அல்லது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ஏஎஸ்டி) என்பது, ஒரு நரம்பியல் கோளாறு. இது பாதித்த குழந்தைகளால் மற்றவர்களுடன் பேச முடியாது, பிறருடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும். அவர்களின் நடவடிக்கைகள் ஒரேமாதிரி இருக்கும். ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதும் மற்றும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு நல்குவதும் ஆட்டிசம் பாதித்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜசக் நியூட்டன் ஆகியோரும் ஆட்டிசம் பாதித்தவர்கள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஜசக் நியூட்டன் இருவரும் அறிவியல் அறிஞர்கள். இவர்கள் இருவரும் ஆட்டிசம் பாதித்தவர்கள். ஆட்டிசம் குறித்த பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன. அவை குறித்து பேசுவதுடன், ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வும் அவசியம்.
அவர்களுக்கு அதிக திறமைகள் இருக்கும்
ஆட்டிச குழந்தைகளின் சிறப்பே அவர்களின் தனித்தன்மை, பலம் மற்றும் திறமை தான். அவர்களின் தனித்திறன்களை புரிந்துகொண்டு, அதை வளர்த்தால், அவர்களும் முன்னேறி சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் உதவக்கூடியவர்களாக மாறுவார்கள்.
தனிநபரின் வேறுபாடுகளை மதிக்க வேண்டும்
குழந்தையின் தனித்திறன்கள் மற்றும் சவால்களை மதித்து அவர்களை பாராட்டி, அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும். எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும், நேர்மறையான சுற்றத்தை உருவாக்கித்தரவேண்டும்.
வரையறுக்கப்பட்ட சூழலை உருவாக்குங்கள்
அன்றாட பழக்கவழக்கங்களை உருவாக்குங்கள். ஒரு வரையறுக்கப்பட்ட சுற்றத்தை கொடுங்கள். அது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை தரும். பயத்தை குறைக்கும்.
சமூக திறன்களை ஊக்குவித்தல்
சமூக திறன்களை வளர்க்க, சமூகத்துடன் அவர்கள் உரையாட வேண்டும். எனவே அவர்களை வயதையொத்தவர்களிடம் அவர்கள் பேசவேண்டும். அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் இருக்க வேண்டும்.
தெளிவான அறிவுரைகளை கொடுங்கள்
அவர்களுக்கு கொடுக்கும் பயிற்சிகளை சிறிதாக மாற்றி கொடுங்கள். அதற்கு தேவையான காட்சி படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குங்கள். அவர்களுக்கு புரிந்துகொள்வதற்கு ஏதுவான வீடியோக்களை உருவாக்குங்கள்.
தேர்வுகளை வழங்குங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு தேர்வுகளுடன் கூடிய எல்லைகளை உருவாக்குங்கள். இது அவர்களை ஊக்கப்படுத்துவதுடன், அவர்களுக்கான கட்டுப்பாட்டை உருவாக்கும்.
நேர்மறை வலுவூட்டல்
அவர்கள் எதைச்செய்தாலும் அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். நேர்மறையான எண்ணங்கள்தான் அவர்களை ஊக்கப்படுத்தும்.
பொறுமையுடனும், நெகிழ்வுதன்மையுடனும் இருங்கள்
அவர்களின் வழக்கங்களை புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் தேர்வுகள் மாறலாம். பொறுமையுடனும், நெகிழ்வுதன்மையுடனும் இருங்கள். குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்ளுங்கள்.
அவர்களின் உரையாடல்கள் வளர உதவுங்கள்
உங்கள் குழந்தைகள் எந்த மொழியில் உரையாடுகிறார்களோ அதற்கு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவர்கள் சைகை மொழி பேசினால் அதற்கு நீங்களும் சைகையிலே பதிலளியுங்கள். அவர்கள் வார்த்தை மொழி பேசினால் நீங்களும் வார்த்தைகளிலே பதில் கூறுங்கள். படங்கள் வைத்து, வீடியோக்கள் காண்பித்து என அவர்கள் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வழிகளை ஏற்படுத்தி கொடுங்கள்.