நிர்மலா சீதாராமன் வெளியிடும் 4 குட் நியூஸ்.. இந்தப் பட்ஜெட்டில் இதுதான் ஹாட் டாப்பிக்..!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்காலப் பட்ஜெட் 2024 அறிக்கையை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், வருமான வரிச் சலுகைகள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வழக்கம் போல் அதிகரித்துள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்தப் பட்ஜெட் இடைக்காலப் பட்ஜெட்டாக வெளியாகும்.இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை என்பதால் கலவையான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருக்கும் வேளையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாத சம்பளக்காரர்களுக்குச் சாதமாக எந்த அறிவிப்புகள் எல்லாம் வரும் எனச் சந்தை ஆய்வாளர்கள் கணித்து 4 விஷயங்களைப் பட்டியலிட்டு உள்ளனர். 80D லிமிட் உயர்வு: இந்தியாவில் அதிகரித்து வரும் ஹெல்த்கேர் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மெடிக்கல் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகைக்கு வருமான வரி 80D பிரிவின் கீழ் தனிநபருக்கு 25000 முதல் 50000 ரூபாய் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 50000 முதல் 75000 ரூபாய் வரையிலான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் புதிய வருமான வரி பிரிவிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவதற்கான சலுகையும் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.பெங்களூருக்கு மெட்ரோ அங்கீகாரம்: பெங்களூர் வருமான வரி துறையால் மெட்ரோ நகரமாக அங்கீகரிக்கப்படாத நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெங்களூர் மெட்ரோ நகரமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் பெங்களூர் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் இது விளங்குகிறது, பெங்களூர் வீட்டு வாடகையைப் பார்க்கும் போதும் இது முக்கியமான தேவையாக மாறியுள்ளது.பொதுவாக மெட்ரோ நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில், அடிப்படை சம்பளத்தில் (Basic salary) சுமார் 50 சதவீதத்தை HRA பிரிவில் வரி விலக்கு பெற முடியும், இதுவே மெட்ரோ அல்லாத நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் சுமார் 40 சதவீதத்தை HRA பிரிவில் வரி விலக்கு மட்டுமே பெற முடிகிறது.கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ்: முதலீட்டாளர்களுக்குக் கேப்பிடல் கெயின் டாக்ஸ் பல காரணிகளில் கணக்கிட்டு அளிக்கப்படுகிறது. உதாரணமாகச் சொத்து வகை, வைத்திருப்புக் காலம், வரி விகிதம் ஆகியவற்றின் கீழ் வரி விகிதம் மாறுகிறது. மத்திய அரசும், வருமான வரி துறையும் இதை எளிமையாக்க முயற்சிக்கலாம்.TDS விளக்கம்: இந்தியாவில் புதிய வீடுகளை வாங்கும் போது அதன் விலை 50 லட்சம் ரூபாயை தாண்டினால் 1 சதவீதம் டிடிஎஸ் செலுத்த வேண்டும். இதை இந்திய மக்கள் Form 26QB மூலம் எளிதாகச் செய்ய முடியும், ஆனால் NRI விற்பனையாளர்களுக்கு இது கடினமான ஆஃப்ஷனாக உள்ளது.