இன்று மாலை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
மேலும் தமிழக முழுவதும் இன்னும் இரண்டு நாட்களுக்கும் மழை உள்ளது என்றும் மாநிலம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வாழும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பல இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.