அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன?
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேலில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்தைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா சுட்டி காட்டி “மற்றொரு போர்” என எச்சரித்துள்ளது. சமீபத்தில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பதற்றங்கள் அதிகமாகியுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கடந்த சனிக்கிழமையன்று மெரோன் மலையில் உள்ள தளத்தை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அங்கு தங்கள் அமைப்புகள் நடைமுறையில் இருந்ததால் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை என்றும், இஸ்ரேலிய வீரர்கள் யாரும் காயமடையவில்லை, ஆனால் தளம் சேதமடைந்ததுள்ளதாக தெரிவித்திருந்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஹெஸ்புல்லாவும் இஸ்ரேலும் வடக்கு இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் உள்ள ஹமாஸ் மீதான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதாக ஹிஸ்புல்லா கூறுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் ஹிஸ்புல்லா நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று அறிக்கை விவரித்துள்ளது. காசாவில் போருக்கு மத்தியில் ஹிஸ்புல்லா ஹமாஸுக்கு ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது.