இதை செஞ்சா 1 ட்ரிலியன் டாலர் உறுதி! டாப் கியரில் தமிழ்நாடு!

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்திக் காட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் ஒரு ட்ரிலியன் டாலர் அளவுக்கு உயர்த்து வேண்டும் முதல்வராகப் பதவியேற்கும் போதே உறுதிமொழி எடுத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

 

அப்படி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8% ஆக இப்போது உள்ளது. அதை 10% அளவுக்கு உயர்த்தினால் நிச்சயம் அந்த இலக்கை எட்டி விடலாம் என்று சொல்கிறார்கள்.

அப்படியல்ல உண்மையில் 18% இருக்கவேண்டும் பியூஷ் கோயல் கூறி இருக்கிறார். ஆனால், 18% உயர்வு என்பது எளிதான காரியமில்லை.

தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் ஏற்கெனவே நிதி பகிர்வு தொடர்பாக ஒரு மோதல் போக்கு நிலவுகிறது. இயற்கை பேரிடர் காலத்தில் கூட அதிகப்படியான நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் உட்படப் பல அமைச்சர்கள் கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.

மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே தமிழக அரசு இயற்கைப் பேரிடரையும் சேர்த்துச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்காகக் கூடுதல் நிதியையும் தமிழக அரசு திரட்டியாக வேண்டும். 2030க்குள் 1 ட்ரிலியன் டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்த உழைத்திடவும் வேண்டும்.

இதனிடையே இந்த நிதி பகிர்வு தொடர்பான சர்ச்சை குறித்து ஒன்றிய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்.

“தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

2026இல் தொகுதி சீரமைப்பு நடக்கும் போது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் மேலும் குறையும். அதிக நிதியை ஒன்றிய அரசுக்குக் கொடுத்து விட்டு அரசியல் அதிகாரத்தை இழக்கும் போது தென் மாநிலங்களில் இப்போது நிலவும் அதிருப்தி அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவரது கருத்து மூலம் திமுக முன்வைத்து வரும் கருத்துகளின் உண்மை உள்ளது என்பதை உணர முடிகிறது. பாஜக அரசின் ஆலோசகரே தமிழக அரசின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆக, இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் 1 ட்ரிலியன் பொருளாதார கனவைத் தமிழ்நாட்டு எட்டிப்பிடிக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன?

சொல்கிறார் ஃபிக்கி இணைத் தலைவர் பூபேஷ் நாகராஜ், “இந்திய அரசு தனது பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதை 20230க்குள் செய்யவேண்டும் என்பது இலக்கு. அப்படி என்றால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 18% முதல் 20% வரை உயர்த்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே 1 ட்ரில்லியன் அளவு பொருளாதாரத்தை எட்ட முடியும்.

அதற்காகத்தான் இதைப்போன்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *