ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணமா.?
நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்கவழக்கங்களாலும், அன்றாடம் செய்யும் செயல்முறைகளாலும் பல வகையான நோய்களை எதிர்கொண்டு வருகிறோம்.
இவற்றை நாம் உண்ணும் உணவின் மூலம் மாற்றலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
நம் முன்னோர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததற்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்களும், கடினமான உழைப்புமே காரணம். தற்போது ஜப்பானில் இந்திய முறைகளை பின்பற்றி பல உணவு பழக்க வழக்கங்களை மாற்றியுள்ளதால் நீண்ட ஆயுளை பெற்றுள்ளனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்
1. எண்ணெயில் பொரித்த உணவு பொருட்களை அதிகமாக உண்ணக்கூடாது.
2.காய்கள், கீரைகள் மற்றும் பழம் வகைகளை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் ஆயுளை அதிகப்படுத்தலாம்.
3. அடிக்கடி உணவுகளை வெளியே வாங்கி சாப்பிடாமல் சமைத்து சத்தான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.
இது போன்ற செயல்முறைகளின் மூலம் ஜப்பானியர்களைப் போல நீண்ட ஆயுளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.