லவ் மேரேஜ் நடந்த ஒரு வாரத்தில்.. தஞ்சையில் பெண் மர்ம மரணம்.. நாடகம் ஆடிய குடும்பம்.. கடைசியில் ஷாக்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன். அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். இங்கிருந்து செல்லும் போது இவர்களுக்கு பழக்கம் இல்லை.
இருந்தாலும் திருப்பூரில் வேலை பார்த்த போது இவர்களுக்கு இடையே உறவு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் நட்பாகி அதன்பின் இவர்கள் இடையே காதலும் ஏற்பட்டு உள்ளது. முதலில் காதலை சொன்ன போது இரண்டு வீட்டிலும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இரண்டு பேருமே வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் இருவரின் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. முக்கியமாக பெண் வீட்டார் இடைநிலை ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பையன் வீட்டாரை ஏற்கவே இல்லை.
இந்த காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த நிலையில் அந்த பெண் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். அவர்கள் ஜாதியிலேயே சொந்த ஊரிலேயே மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து திருப்பூரில் இருக்கும் பெண்ணையும் கிளம்பி வர சொல்லி உள்ளனர்.
வீட்டில் பிரச்சனை ஆனது தெரிந்த நிலையில் நவீன் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்
திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்து ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஐஸ்வர்யாவை வெளியே விடாமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்துள்ளனர்.இந்த நிலையில்தான் கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளனர்
இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. நவீன் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பின் அந்த ஊர் மக்களும் ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆனது என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஒன்றாக சேர்ந்து கிராம நிர்வாக அலுவலகரிடம் பேசி உள்ளனர். தற்போது இந்த விஷயம் தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றன. பெண்ணின் குடும்பத்தார் தீவிர ஜாதி வெறி கொண்டவர்கள் என்பதால் நவீனுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.