வளைகாப்பு நடத்துவதற்கு உரிய சுப நாட்கள் எது?
குழந்தை பிறக்கும் முன்பு நடத்தப்படும் வளைகாப்பு என்பது அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்திற்கு முக்கியமான நிகழ்வாகும்.
அதை சரியான சுப நாளில் செய்தால் நற்பலன் கிடைக்கும்.
இந்து சாஸ்திரப்படி வளைகாப்பு என்பது கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு சடங்கு ஆகும். ஒரு வம்சத்தின் விருத்தியை தாங்குபவள் பெண். அவள் அந்த மகவை பாதுகாப்பாக ஈணவும், போற்றி வளர்க்கவும் வேண்டி ஊராரின், சொந்த பந்தங்களின் முழு ஆசியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வளைகாப்பு நடத்தப்படுகிறது.
அவ்வாறாக நடத்தப்படும் வளைகாப்பு பெண் ஆனவள் மகவை தாங்கும் 7வது மாதத்திலோ அல்லது 9வது மாதத்திலோ ஒற்றை படையில் மாதங்கள் வரும்போது நடத்தப்படுகிறது. அப்படி வளைகாப்பு நடத்தும்போது சரியான கிழமை, திதி கூடி வரும்போது நடத்துவது கர்ப்பிணி பெண்ணிற்கு கடவுளர்களின் நல்லாசியை தீர்க்கமாக கிடைக்க செய்யும்.
வாரத்தின் ஏழு கிழமைகளில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமை வளைகாப்பு நடத்துவதற்கு சிறப்பான நாட்களாகும். வளைகாப்பை திதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி நாட்களில் நடத்தலாம்.
ரோகிணி, மிருகசீரிசம், புனர்பூசம், பூசம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, திருவோண நட்சத்திர காலங்கள் வளைகாப்பிற்கு சிறந்த நட்சத்திர நேரமாகும்.