என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க!

ன்றுமே இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க!

நாம் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரே ஆசை என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான். வயது ஏறிக் கொண்டே செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது போல முதுமை தோற்றத்தையும் தடுக்க முடியாது. ஆனால் முதுமை தோற்றத்தை தள்ளிப் போட முடியும்.

இதற்கு பல விதமான வழிமுறைகள் உள்ளது. மருந்துகள், மாத்திரைகள், ஆயுர்வேத முறைகள், அறுவை சிகிச்சைகள் என பலவிதமான வழிகள் உள்ளது. ஆனால் இதில் சிலவற்றில் பக்க விளைவுகள் உள்ளது. இதற்கு மாற்றாக நாம் இயற்கையான வழிமுறையை பின்பற்றலாம்.

அதாவது பழங்களை சாப்பிடுவது, காய்கறிகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்வது என பல வழிகள் உள்ளது. இதில் என்றுமே இளமை தோற்றத்துடன் இருக்க என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது குறித்து பார்க்கலாம்.

இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள்…

* இளமையுடன் வாழ்வதற்கு பெர்ரி பழங்களை சாப்பிடலாம். பெர்ரி பழங்கள் முதுமையை தள்ளிப் போட உதவி செய்கின்றது.

* என்றுமே இளமையுடன் இருப்பதற்கு கிவி பழத்தை சாப்பிடலாம். கிவி பழத்தை சாப்பிடுவதால் முதுமைக்கு உண்டான அறிகுறிகளை தடுக்க உதவி செய்யும். அதாவது தோல் சுருக்கம், முதுமை தோற்றம் போன்ற வயது மூப்புக்கான அறிகுறிகளை தடுக்கும்.

* இளமையுடன் என்றுமே வாழ்வதற்கு அவகோடா பழத்தை சாப்பிட்டு வரலாம். அவகோடா பழத்தை சாப்பிடுவதால் சரும அழற்சியை போக்கலாம்.

* என்றுமே இளமையுடன் இருக்க திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சை பழம் சருமத்தை இளமையாக வைக்க உதவி செய்யும்.

* என்றும் இளமையுடன் வாழ்வதற்கு ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிடலாம். ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் பொழுது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

* என்றுமே இளமையுடன் இருக்க சாப்பிட வேண்டிய பழங்களில் தர்பூசணி பழமும் ஒன்று. தர்பூசணி பழத்தை சாப்பிடும் பொழுது யுவி(UV) சேதத்தை தடுக்கலாம்.

* மாதுளம் பழத்தையும் நாம் என்றும் இளமையுடன் இருக்க சாப்பிடலாம். மாதுளம் பழம் சருமத்தை காக்க உதவும்.

* என்றுமே இளமையுடன் இருக்க சருமத்திற்கு ஏற்ற பப்பாளி பழத்தை சாப்பிடலாம். பப்பாளி பழத்தை நாம் சாப்பிடும் பொழுது இளமை தோற்றத்தை திரும்பப் பெற உதவி புரியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *