வேர்க் கடலை 1 கப்; இட்லி, தோசைக்கு கர்நாடகா ஸ்டைல் இந்த சட்னி செய்து பாருங்க
சுவையான கர்நாடக கோலார் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை- 1 கப்
பூண்டு – 20 பல்
வரமிளகாய் – 10
சீரகம் -1 டீஸ்பூன்
தக்காளி – 2
கறிவேப்பிலை, புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, வேர்க் கடலை, பூண்டு, வரமிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். வேர்க்கடலை நன்கு வறுபட வேண்டும், அதே நேரத்தில் கருகி விடக் கூடாது. அடுத்து நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை நன்கு ஆறி விடவும். ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான, காரசாரமான கர்நாடக ஸ்டைல் கோலார் சட்னி ரெடி.