பாரம்பரியம் மாறாத சட்னி : ஒரு முறை இப்படி செய்யுங்க: செம்ம சுவையா இருக்கும்
இது ஒரு பாரம்பரிய சட்னி வகை. மறக்காம செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
3 வெங்காயம்
பெருங்காயம் சிறிய அளவு
வத்தல் 8
பூண்டு 7
கடுகு- 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – அரை ஸ்பூன்
எண்ணெய்
கருவேப்பிலை
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்த்து கொள்ளவும். வத்தலை வெண்ணீரில் ஊற வைத்ததை எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, வத்தல், உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். எண்ணெய்யில் கடுகு சேர்க்கவும். உளுந்தம் பருப்பை சேர்க்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரைத்ததை சேர்க்கவும். 3 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து கிளரவும்.